/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஞ்., சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை
/
பஞ்., சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை
பஞ்., சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை
பஞ்., சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 17, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி, டிச. 17-
ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் நேற்று, 20க்கும் மேற்பட்ட சுகாதார ஊக்குனர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம பஞ்.,களில், 10 ஆண்டுகளாக, சுகாதார ஊக்குனர்களாக பணியாற்றி வருகிறோம். கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு, கழிவறை கட்டுவதற்கு விழிப்புணர்வு வழங்குதல், பள்ளி, அங்கன்வாடி மையங்களில் கழிவறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு என, பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. எங்களுக்கு கடந்த ஜன., முதல் தொகுப்பூதியமாக, 2,000 ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்தும் வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.