/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை
/
சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை
ADDED : டிச 29, 2025 10:01 AM

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சேதமான மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியை இடிந்து விட்டு, புதிதாக கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், எர்ர-ணஹள்ளி பஞ்., ரெட்டியூர் ஏரி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட நிலையில், கடந்த, 2013ல் மறு சீர-மைப்பு பணி செய்தனர்.
அதை தொடர்ந்து, நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதி, துாண் மற்றும் உட்பட பல இடங்களில் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்-டியின் கான்கிரீட் மற்றும் கம்பிகள் பெயர்ந்துள்-ளது. எனவே, சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

