ADDED : ஜன 30, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகரன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதா-வது:
செம்மை நெல் நாற்றுக்கு அடையாள அட்டை கொடுத்தது போல், அதை மறு ஆய்வு செய்து நிரந்தர அட்டை வழங்கி அத்-துடன் பஸ் பாஸ் வழங்க வேண்டும். பி.எஸ்.சி., வேளாண் படிப்பு முடித்தவர்களுக்கு, பூச்சி மருந்து கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும். கெலமங்கலம் ஒன்றியம் முத்தன வள்ளி கிரா-மத்திற்கு சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

