/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'
/
மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 17, 2025 01:50 AM
சூளகிரி:ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், குருபட்டி பஸ் ஸ்டாப் பகுதியிலும், சூளகிரி ஸ்டேஷன் போலீசார், பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரிலும் ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக, குருபட்டியை சேர்ந்த ஆளவந்தான், 34, என்பவரை மத்திகிரி போலீசாரும், சூளகிரி முஸ்லிம் தெருவை சேர்ந்த முனீர், 25, மகபூப், 24, சூளகிரி அண்ணா நகரை சேர்ந்த மபூப் ஜான், 23, ஆகிய, 3 பேரை, சூளகிரி போலீசாரும் கைது செய்தனர்.
அதேபோல், ஓசூர் அருகே குருபட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டி, கடை உரிமையாளர்களிடம் பணம் பறித்ததாக, குருபட்டியை சேர்ந்த மணி, 28, என்பவர், மத்திகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.