ADDED : ஆக 26, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகலுார், ஓசூர் அடுத்த பாகலுார் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், பி.முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பாப்பையா என்பவரது நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, பாகலுார் ஜீவா நகரை சேர்ந்த சீதாராமன், 46, மேல்சூடாபுரத்தை சேர்ந்த வெங்கடப்பா, 60, பி.முதுகானப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா, 38, சர்வேஷ், 37, கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஆனைக்கல் அருகே திம்மேனப்பள்ளியை சேர்ந்த சீனிவாஸ், 49, ஆகிய, 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6,490 ரூபாய் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.