/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீர் கால்வாய் மீது நீர்த்தேக்க தொட்டி
/
கழிவுநீர் கால்வாய் மீது நீர்த்தேக்க தொட்டி
ADDED : அக் 17, 2024 01:10 AM
கழிவுநீர் கால்வாய் மீது
நீர்த்தேக்க தொட்டி
போச்சம்பள்ளி, அக். 17-
காவேரிப்பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் பஞ்.,க்கு உட்பட்ட, நெடுங்கல் கிராமத்தில், காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில், கந்தன் வீடு முதல் கோவிந்தசாமி வீடு வரை, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல், நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் கழிவுநீர் செல்லும்போது, கிராம மக்கள் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வினியோகிக்கும் நீரை பயன்படுத்தினால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நீர்த்தேக்க தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.