/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம்
/
தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம்
தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம்
தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம்
ADDED : டிச 05, 2025 11:09 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், வேலம்பட்டி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க, செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்-தது. மாநில பொதுச்செயலாளர் உதயகுமார், துணைத்தலைவர்கள் மூர்த்தி, முருகன், அமைப்-பாளர் ராம்தாஸ், துணைச் செயலாளர் கோணப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்-குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் வேணுகோபால், சங்க புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, தீர்-மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் போர்க்-கால அடிப்படையில் அனைத்து விவசாயிக-ளுக்கும் இயற்கை விவசாயம் செய்ய வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலம் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகளை இலவசமாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி-களில் உள்ள சீமை கருவேல மரல்களை அகற்ற வேண்டும். தமிழகத்தில், மா விவசாயத்தை காக்க அனைத்து மாவட்டங்களிலும், மா ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும். விவசா-யக்கடன், பயிர்க்கடன், நகைக்கடன் ஆகிய-வற்றை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களை அதிகம் நாசம் செய்யும் யானைகள், காட்டுப் பன்றிகள், மயில்களை கட்-டுப்படுத்த, விளைநிலங்களில் மின்வேலி அமைக்க வேண்டும். அறுவடை செய்துள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.

