ADDED : அக் 08, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: கெலமங்கலம் அருகே ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்-னப்பா, 70. ரயில்வேயில் கேட் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்-றவர்.
மது அருந்தும் பழக்கம் இருந்ததால், சின்னப்பாவிடம் அவரது மனைவி ரத்தினம்மா, 61, கேள்வி எழுப்பியுள்ளார். இதில் விரக்தியடைந்த சின்னப்பா, கடந்த, 4ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, ஜெக்கேரியில் உள்ள தன் சகோதரர் முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி புகார்படி, கெலமங்கலம் போலீசார் சின்னப்பாவை தேடி வருகின்றனர்.
