/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
/
வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 06, 2025 05:49 AM
பாலக்கோடு: பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, வட்ட தலைவர் சங்கர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சிவகுமார், வட்ட பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். ஜமாபந்தி படியை உயர்த்தி வழங்க வேண்டும். 2023 மார்ச், 8ல், நிறுத்தப்பட்ட கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
* அரூரில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, வட்ட தலைவர் கலாநிதி தலைமை வகித்தார்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வட்ட தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். வட்ட துணை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
* பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்க பென்னாகரம் வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் சிவசங்கரன், வட்ட
செயலாளர் சங்கர் ஆகியோர் பேசினர்.