/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குரூப் - 4' தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
/
'குரூப் - 4' தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
'குரூப் - 4' தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
'குரூப் - 4' தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 10, 2025 01:01 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், 'குரூப் - 4' தேர்வு வரும், 17ல் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வை சிறப்பான முறையில் நடத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.
இது குறித்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'குரூப் - 4' தேர்வு, 93 தேர்வுக்கூடங்களில் நடக்கிறது. இதில், 28,060 தேர்வர்கள் பங்கேற்று, இத்தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை கலெக்டர் நிலையில், 11 பறக்கும் படை அலுவலர்கள், ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அந்தந்த தாசில்தார்கள், 30 நடமாடும் அலகு அலுவலர்கள், 93 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 93
வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கவும் மற்றும் சிறப்பு பஸ்
வசதிகள் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளவாறு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களுக்கு, சரியான நேரத்திற்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.