/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனத்தில் தீ வைப்போர் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்; வனத்துறை அறிவிப்பு
/
வனத்தில் தீ வைப்போர் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்; வனத்துறை அறிவிப்பு
வனத்தில் தீ வைப்போர் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்; வனத்துறை அறிவிப்பு
வனத்தில் தீ வைப்போர் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்; வனத்துறை அறிவிப்பு
ADDED : மார் 17, 2024 02:46 AM
அரூர்:வனத்தில் தீ வைக்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என, கோட்டப்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:கோடை காலம் துவங்கிய நிலையில், வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வனச்சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சிறு வனமகசூல், புளி மகசூல் சேகரம் செய்வோர் வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட், தீப்பெட்டி முதலிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. வனப்பகுதியிலுள்ள கோவில்களில் வழிபாடு செய்வோர் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும். வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். மீறினால் தண்டிக்கப்படுவார்கள். வெள்ளாடு மேய்ச்சல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே காடுகளில் தீ ஏற்படாமல் வனத்தை பாதுகாக்க உதவ வேண்டும். 1882ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டப்பிரிவு, 21ன்படி, வனத்தில் தீ வைத்தாலோ, தீ ஏற்பட காரணமாக இருந்தாலோ அவருக்கு அதிகபட்சம், 5 ஆண்டு சிறை தண்டணை மற்றும், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 1882ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டப்பிரிவு, 23ன்படி, வன உரிமை குழு, கிராம வனகுழு மற்றும் வனப்பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்கவும், தீ பரவாமல் தடுத்தல் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவ வேண்டும். காட்டிற்கு தீ வைக்கும் நபர்களை, வனத்துறையில் பிடித்து கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். கோட்டப்பட்டி வனச்சரக அலுவலர் - 97518 43446, வனவர்கள் - 80988 33198, 98946 88249, வனக்காப்பாளர்கள் - 78689 90968, 98422 82611 என்ற எண்களில் தகவல் தெரிவிக்ககலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

