டெண்டர் விட்டும் சாலை அமைக்காத அவலம்: 3 மாதமாக கிடப்பில் பணி
டெண்டர் விட்டும் சாலை அமைக்காத அவலம்: 3 மாதமாக கிடப்பில் பணி
ADDED : ஜூன் 01, 2026 05:12 AM

ஓசூர்; ஓசூரில், டெண்டர் விடப்பட்ட சாலை பணிக-ளுக்கு பூமி பூஜை போடப்பட்ட போதும், 3 மாத-மாக சாலை பணி துவங்காமல் மெத்தனமாக உள்ளனர்.
ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்., உட்பட்ட குமுதேப்பள்ளியிலிருந்து, திப்பாளம் கிராமம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. குண்டும், குழியுமான இச்சாலையை தினமும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் பயன்படுத்துகின்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ளதால், குழிகளில் தண்ணீர் தேங்குகிறது. அதேபோல், திப்பாளம் அருகே ஆர்.ஆர்., கார்டன் பகுதியில், 350 மீட்டர் துார சாலை மோசமாக உள்ளது.அதனால் கடந்த தி.மு.க., ஆட்சியில், குமுதேப்-பள்ளி - திப்பாளம் சாலையை புதிதாக அமைக்க, 49 லட்சம் ரூபாயும், ஆர்.ஆர்., கார்டன் சாலைக்கு, 12 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் முதல் வாரத்தில், முன்னாள் அமைச்சர் சக்கர-பாணி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் மூலம் பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து சட்-டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக கூறி, சாலை பணியை துவங்கவில்லை. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, பூமி பூஜை பணிகள் போடப்பட்டதால், பணிகளை துவங்க வேண்டும் என, பஞ்., மற்றும் ஒன்றிய நிர்வா-கத்தை மக்கள் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது, த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை போடப்பட்ட குமுதேப்பள்ளி - திப்பாளம் மற்றும் ஆர்.ஆர்., கார்டன் சாலை பணிகளை இன்னும் அதிகாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிக-ளிடம் கேட்டால், டெண்டர் விடப்பட்ட பணிக்கே நிதியில்லை எனக்கூறி தட்டி கழித்து வருகின்-றனர். வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே இச்சாலையில் பயணிக்கின்றனர்.
அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், மக்கள் கடும் சிரமப்பட வேண்டியுள்ளது. உடனடியாக சாலை பணியை துவங்கி, வாகன ஓட்டிகள் பாதிப்பதை தடுக்க, கோரிக்கை
எழுந்துள்ளது.
