/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலை கிராமங்களுக்கு சாலை: பா.ஜ., மனு
/
மலை கிராமங்களுக்கு சாலை: பா.ஜ., மனு
ADDED : ஜூலை 29, 2025 01:24 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பைல்பட்டி முதல், உன்சனஹள்ளி மலை கிராமம் வரை, 4 கி.மீ., துாரம் சாலை வசதி இல்லை. இதனால், உரிகம், பைல்பட்டி, கஸ்துாரி, மஞ்சுகானப்பள்ளி, நந்திமங்கலம் உட்பட, 9 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்பதால், வனத்துறை அனுமதி வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால், அனுமதி வழங்காததால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் மற்றும் கட்சியினர், அப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, நேற்று காலை சாலை வசதி இல்லாத கிராமங்களை பார்வையிட்டனர். அப்போது, நாடு சுதந்திரமடைந்து, 78 ஆண்டுகளாக இப்பகுதிகளுக்கு சாலை வசதி இல்லை.
அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மத்திய, மாநில அரசுகளிடம் தெரிவித்து, சாலை அமைக்க உரிய அனுமதி பெற்று கொடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மத்திய அரசிற்கு, பா.ஜ., கட்சி சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

