தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளியை தாக்கிய ரவுடி கைது

தொழிலாளியை தாக்கிய ரவுடி கைது

தொழிலாளியை தாக்கிய ரவுடி கைது


ADDED : ஏப் 17, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பி.வி.,பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னிவீரப்பா, 41. கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெகன், 34, மற்றும் தளி கொத்தனுாரை சேர்ந்த மாதேஷ், 33, ஆகியோர், சென்னி வீரப்பாவிடம் மது அருந்த பணம் கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த சென்னிவீரப்பா, தளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஜெகனை கைது செய்தனர். மாதேசை தேடி வருகின்றனர். ஜெகன் மீது தளி போலீஸ் ஸ்டேஷனில், இரு வழிப்பறி, கூட்டு கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டுதல் உட்பட மொத்தம், 4 வழக்குகள் உள்ளன. மேலும் அவர், போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us