ADDED : மார் 28, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தளி ஏரிக்கரை அருகே நேற்று வாகன சோதனை செய்தனர். அப்-போது அவ்வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்க-ளூருவை சேர்ந்த கிருஷ்ணன், 38, என்பவர் தனது காரில் சென்றார்.
காரை சோதனை செய்த போது, உரிய ஆவணங்களின்றி, 1 லட்சம் ரூபாயை கொண்டு செல்வது தெரிந்தது. நிலம் வாங்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். பணத்-திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேன்கனிக்-கோட்டை தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கங்கையிடம் ஒப்ப-டைத்தனர்.
