sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.120 கோடி! நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் முடக்கம் ஓசூர் ரிங்ரோடு சர்வே பணி 7 ஆண்டுகளாக இழுபறி

/

ரூ.120 கோடி! நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் முடக்கம் ஓசூர் ரிங்ரோடு சர்வே பணி 7 ஆண்டுகளாக இழுபறி

ரூ.120 கோடி! நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் முடக்கம் ஓசூர் ரிங்ரோடு சர்வே பணி 7 ஆண்டுகளாக இழுபறி

ரூ.120 கோடி! நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் முடக்கம் ஓசூர் ரிங்ரோடு சர்வே பணி 7 ஆண்டுகளாக இழுபறி


ADDED : டிச 28, 2024 02:55 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் அமைய வேண்டிய அவுட்டர் ரிங்ரோடு, 7 ஆண்டுகளாக சர்வே பணி கூட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் மாநில நெடுஞ்சாலைத்துறையிடம், 120 கோடி முடங்-கியுள்ளது. இத்திட்டத்தில் தி.மு.க., அரசு கவனம் செலுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக எல்லையான ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில எல்லையான ஜூஜூவாடியில் துவங்கி, அனுமேப்பள்ளி அக்ரஹாரம், பேகேப்பள்ளி, நல்லுார், எழுவப்பள்ளி, ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, சின்னகொள்ளு, பெத்த கொள்ளு, ஆலுார், மோரனப்பள்ளி வழியாக பேரண்டப்-பள்ளி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு, அவுட்டர் ரிங்ரோடு அமைக்-கப்படும் என, அப்போதைய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய-லலிதா, 110 விதியின் கீழ் சட்டசபையில்

அறிவித்தார்.

தொடர்ந்து, 2017 டிச., 20 ல் அரசாணை வெளியிடப்பட்டு, சர்வே பணி, விவசாயிகளுக்கு இழப்பீடு போன்ற பல்வேறு தேவைகளுக்காக, 124.96 கோடி ரூபாய் மாநில நெடுஞ்சாலைத்-துறைக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் பணியாளர்களுக்கு ஊதியம் போன்றவற்றுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை முனைப்பு காட்டாமல் அலட்சியமாக இருப்பதால், கிட்டத்தட்ட, 120 கோடி ரூபாய்க்கு மேல், அவர்க-ளிடம் முடங்கியுள்ளது. இப்பணிக்கான முழு சர்வே முடிக்கப்ப-டவில்லை; ஒரு சில இடங்களில் மட்டுமே சர்வேயை முடித்து கற்கள் நட்டுள்ளனர். இச்சாலை பணிக்காக, 120 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அதற்கும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசு, ஓசூரின் அவுட்டர் ரிங்ரோடு திட்டத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளது. ஜெயலலிதா அறிவிக்கும் போது ஓசூரில் இருந்த நிலத்தின் மதிப்பை விட, தற்போது பல மடங்கு நில மதிப்பு உயர்ந்து விட்டது. இச்சாலை திட்டத்தை இழுத்த-டித்தால், தற்போது நிலத்தை கையகப்படுத்தினால், கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டி வரும். அதன் மூலம் அரசிற்கு கூடுதல் செலவாகும் நிலை உருவாகி உள்ளது.

அத்துடன், ஜூஜூவாடி அருகே, 3 வீடுகள் மட்டுமே இருந்த தனியார் லே அவுட்டில் தற்போது, 30 வீடுகள் வரை கட்டியுள்-ளனர். அவ்வழியாக தான் சாலை செல்ல இருப்பதாக நெடுஞ்சா-லைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி அடுத்தடுத்த சிக்-கல்கள் உருவாகியுள்ளன. ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவுட்டர் ரிங்ரோடு திட்டம், பயன்பாட்டிற்கு வருமா என்ற கேள்வி, ஓசூர் பகுதியினர் இடையே எழுந்துள்ளது.

சாட்டிலைட் ரிங்ரோட்டில் கவனம் செலுத்தி வரும் அரசியல் கட்சிகள், ஓசூர் அவுட்டர் ரிங்ரோட்டிலும் கவனம் செலுத்தி பணியை தீவிரப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us