ADDED : மார் 21, 2026 07:03 AM
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்
சாவடி அருகே, நேற்று காலை வாகன சோதனை செய்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற ரங்கவிலாஸ் என்ற தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, திருச்-சியை சேர்ந்த ஹார்ட்வேர்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தங்கவேல், 55, என்பவர் உரிய ஆவ-ணமின்றி, 15 லட்சம் ரூபாய் கொண்டு செல்வது தெரிந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தங்கவேலிடம் விசாரணை நடந்து வருகிறது.அதேபோல், தமிழக எல்லையான ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், நேற்று காலை நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியை சேர்ந்த குமார், 47, என்பவர் உரிய ஆவணமின்றி, 1.10 லட்சம் ரூபாயை ஆம்னி வேனில் எடுத்து சென்றார். அப்-பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
