ADDED : ஏப் 04, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பறக்கும் படை குழு-வினர், சேட்டு தலைமையில் ஒடசல்பட்டி கூட்-ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை, 7:55 மணியளவில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, சேலம் மாவட்டம் காடையாம்பட்டியி-லிருந்து, தர்மபுரி மாவட்டம் அரியகுளம் நோக்கி சென்ற ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த காடையாம்பட்டி, பாண்டி நகரை சேர்ந்த ராஜேந்திரன், 71, உரிய ஆவணமின்றி, 1.68 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பி-ரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
