ADDED : மார் 31, 2026 05:31 AM
தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பில் நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, அனுசோதனை கிராமத்தை சேர்ந்த ஜெயபால், 39, என்பவரது, காரில் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி, 16 லட்சத்து, 61,940 ரூபாயை எடுத்து செல்வது தெரிந்தது. அதனால், அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் ஒப்படைத்தனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை குழு நித்யா தலைமையிலான குழுவினர் செம்மனஹள்ளி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூக்கனுாரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஹோண்டா சைன்பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் வந்த தர்மபுரி ராஜாப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி, 45. உரிய ஆவணமின்றி 51,700 ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர். பின் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
