ADDED : மார் 17, 2026 08:07 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி, நிலை கண்காணிப்பு குழுவினர், பெல்லாரம்பள்ளி கூட்ரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஆல்டோ காரை சோதனையிட்டனர். அதில் வந்த வெங்கடாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 30, என்பவர், 1.08 லட்சம் ரூபாயை, உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதால் அதை பறிமுதல் செய்தனர். அதேபோல, பெத்ததாளப்பள்ளி அருகே, போர்டு ஐகான் காரில் சோதனையிட்டதில், காரில் ஆவணங்களின்றி அதே பகுதியை சேர்ந்த சந்திரகாந்தன், 38 என்பவர், எடுத்து சென்ற, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தொகை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான், தாசில்தார் ரமேஷ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
