ADDED : ஏப் 14, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை அலுவலர் சேட்டு தலைமையிலான குழுவினர், ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் நேற்று மாலை, 3:50 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த, மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த, தர்மபுரியை சேர்ந்த அரிபிரசாத், 27, என்பவர் உரிய ஆவணமின்றி, 55,000 ரூபாய் வைத்திருந்தார்.
இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
