ADDED : மார் 24, 2026 05:46 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, ஓசூரில் வசிக்கும், கர்நாடகா மாநிலம், மாலுாரை சேர்ந்த முகுந்தா ஆச்சாரி, 63, என்பவர், பெங்களூருக்கு நகை வாங்கச்சென்று, வாங்காமல் உரிய ஆவணமின்றி, 60 லட்சம் ரூபாயுடன் திரும்பி வந்தது தெரிந்தது. அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர்
ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், ஓசூர் டி.வி.எஸ்., சோதனைச்சாவடி அருகே, உரிய ஆவணமின்றி ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த ராமமூர்த்தி, 62, என்பவர், தன் மகள் திருமணத்திற்காக கொண்டு சென்ற, 13.95 லட்சம் ரூபாயை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
