/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
/
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : அக் 07, 2024 03:16 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின், 99ம் ஆண்டு துவக்க விழா மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, கெலமங்கலம் ஒன்றிய தலைவர் ரவி தலைமையில், நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. சவுடேஸ்வரி திருமண மண்டபத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு பெற்றது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
பேட்டராய சுவாமி கோவில் அர்ச்சகர் ஜெகநாதசுவாமி அய்யங்கார் தலைமை வகித்தார். தென்பாரத அமைப்பாளர் பாலாஜி, நுாருந்துசாமிபெட்டா சுவாமிஜி சதாசிவம், ஆர்.எஸ்.எஸ்., மேற்கு மாவட்ட செயலாளர்
வேணுகோபால், சேலம் கோட்ட இணை செயலாளர் கனகராஜ், கிருஷ்ணகிரி, தர்மபுரி மண்டல தலைவர் சிவசங்கர், பா.ஜ., நிர்வாகிகள் நாகராஜ், சகுந்தலா, விஸ்வ ஹிந்து பரிஷத் விஷ்ணுகுமார், இந்து முன்னணி பாபு
உட்பட பலர் பங்கேற்றனர்.* காவேரிப்பட்டணத்தில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. டாக்டர் அசோக்குமார் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர்
சங்கர்லால் நன்றி கூறினார். இந்த அணிவகுப்பு காவேரிப்பட்டணம் சந்தாபுரத்தில் புறப்பட்டு, கோவிந்தசெட்டி தெரு, சேலம் சாலை, பாலக்கோடு சாலை, பன்னீர்செல்வம் சாலை வழியாக, பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. அங்கு ஆர்.எஸ்.எஸ்.,
பொதுக்கூட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.