sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

/

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை


ADDED : மார் 17, 2024 02:50 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், 356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை எனவும், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் வரும், ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் என அறிவித்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறை படுத்தப்பட்டது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாவட்டத்தின், 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 8,11,375 ஆண்கள், 8,06,354 பெண்கள் இதரர், 305 பேர் உள்பட, 16,18,034 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் உணர்ந்து, 100 சதவீத ஓட்டளிப்பை கொடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டம். இம்மாவட்ட எல்லைகளில் ஏற்கனவே, 9 சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக, 6 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 'சிசிடிவி' கண்காணிப்பு வசதி செய்யப்பட உள்ளது. இதை நேரடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள், விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், மது, பரிசுப்பொருட்கள் கண்காணிக்கப்படும். இது குறித்து தகவல் தெரிந்தால், 1800 425 7076, 04343 230121, 04343 230124, 04343 230125, 04343 230126, அல்லது 1950 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இது குறித்து கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு மையம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி தலைமையில் சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் செயல்படும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த, 1,883 ஓட்டுச்சாவடிகளில், 5 புதிய ஓட்டுச்சாவடிகளை சேர்த்து, வரும் தேர்தலில், 1,888 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 128 பகுதிகளில், 356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. பொதுக்கள் தங்கள் புகார்களை, 'C-Vigil' என்னும் செயலி மூலம் அளித்தால், 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும், 27 வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி கமிஷனர் சினேகா, எஸ்.பி., தங்கதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us