/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
/
கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
ADDED : டிச 28, 2024 02:57 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மைத்
துறையின் அட்மா திட்டம் சார்பில், அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தும்மனப்பள்ளி பஞ்., உட்பட்ட அனைத்து சமூக நிலை வேளாண் விவசாயிகளுக்கு, முகலப்பள்ளி கிராமத்தில் வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடந்தது. துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் தலைமை வகித்து, ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் கொள்ளு, இறவை ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள், முதல்வரின் மண்-ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட பயன்கள், மானிய விபரங்கள், விதைப்பண்ணை பயன்கள் பற்றி எடுத்துரைத்தார்.
அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கார்த்திக் ராஜா, துவரை பயிரில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், சூரிய விளக்கு பொறி பயன்பாடு, மண்ணில் ஏற்படும் பூஞ்சாண் நோய்-களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ், அட்மா திட்ட வட்-டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா உட்பட பலர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம்
செய்திருந்தார்.

