ADDED : ஆக 06, 2026 01:26 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பி.டி.ஓ., ஆபீஸ் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்-துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்-தது. பி.டி.ஓ.,க்கள் சரவணன், பாபி பிரான்சினா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பஞ்., செயலர்களை, தமிழ்நாடு உறுதியளிக்-கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், இணைக்க வேண்டும். விடுபட்ட இடைக்கால ஓய்வூதியமாக, 3,400 ரூபாய், ஒட்டுமொத்த தொகை, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பஞ்., செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.
கூடுதல் பொறுப்பு வகிக்கும் பஞ்சாயத்து களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி வழங்க வேண்டும். பஞ்., செயலாள-ராக பணியாற்றி, 1996க்கு பிறகு இளநிலை உதவியாளராக பணி-யேற்றவர்களுக்கு பஞ்., செயலாளர் பணிக் காலத்தில், 50 சத-வீதம் ஓய்வூதியத்திற்கு எடுத்து கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்திற்கு மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், பி.டி.ஓ., நிலையில் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
