/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டுறவு உதவியாளர் பணியிடம் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல்
/
கூட்டுறவு உதவியாளர் பணியிடம் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல்
கூட்டுறவு உதவியாளர் பணியிடம் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல்
கூட்டுறவு உதவியாளர் பணியிடம் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல்
ADDED : நவ 23, 2025 12:54 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதிரி நேர்காணல் நடந்தது.
கூட்டுறவுத்துறை சார்பில், தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள, 2,581 பணியிடங்களுக்கு கடந்த அக்.,11ல் தேர்வு நடந்தது. இதை, 56,800 பேர் எழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, மத்திய கூட்டுறவு வங்கிகளில், 17 உதவியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள, 60 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
மாவட்டம் முழுவதும், 920 பேர் கலந்து கொண்ட நிலையில், மொத்தமுள்ள, 77 பணியிடங்களுக்கு, 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு வரும், 26ல், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியில் நேர்காணல் நடக்கிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல் நடந்தது. அவர்கள் நேர்காணலுக்கு தயாராகும் வகையில், பல்வேறு வகுப்புகள் எடுக்கப்பட்டது. இது குறித்து வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் கூறுகையில், “தேர்ச்சி பெற்றவர்களில், மூன்றில் ஒருவருக்கு மட்டுமே பணி கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு தயாராகும் வகையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும், தனித்தனியாக மாதிரி நேர்காணலும் நடத்தப்பட்டது,” என்றார்.

