sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 சனாதனத்தை அழிக்க முடியாது அஹோபில மடாதிபதி கருத்து

/

 சனாதனத்தை அழிக்க முடியாது அஹோபில மடாதிபதி கருத்து

 சனாதனத்தை அழிக்க முடியாது அஹோபில மடாதிபதி கருத்து

 சனாதனத்தை அழிக்க முடியாது அஹோபில மடாதிபதி கருத்து


ADDED : ஜன 29, 2026 06:11 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ''சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது,'' என, ஆந்திராவிலுள்ள அஹோபில மடாதிபதி ஜீயர் ஸ்ரீஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, அகரம் பகுதியிலுள்ள அபய ஹஸ்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

சனாதனம் தர்மம் என்றால் ஆரம்பம் இல்லாதது. கடவுள் எப்போது உருவானார் என்பது நமக்கு தெரியாது. கடவுள் இல்லாத இடமே இல்லை. சனாதன தர்மம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் நல்லது என, கடவுள் கூறினார்.

சனாதன தர்மம் என்னவென்றால், ஒவ்வொருவரும் தம் கடமையை சரி வர செய்ய வேண்டும். இப்போது, சனாதன தர்மத்தை மிகவும் கேவலமாக பேசுகின்றனர். திருப்பரங்குன்றத்துடன் மயானத்தை ஒப்பிட்டு ஒருவர் பேசியிருக்கிறார்.

இப்படி உதாரணம் சொல்வதெல்லாம், சனாதன தர்மத்திற்கு விரோதம். ஆனால், சொல்பவர்கள் எல்லாரும், தனிப்பட்ட முறையில் சனாதனத்தை பின்பற்றுகின்றனர். சனாதன தர்மத்தையும், ஹிந்து தர்மத்தையும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us