/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்யலாம்' என பல லட்சம் ரூபாய் மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்
/
'ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்யலாம்' என பல லட்சம் ரூபாய் மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்
'ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்யலாம்' என பல லட்சம் ரூபாய் மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்
'ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்யலாம்' என பல லட்சம் ரூபாய் மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்
ADDED : அக் 16, 2025 02:02 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, பாலாஜி என்பவர் தலைமையில் வந்த, 10க்கும் மேற்பட்டோர், குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக கூறி, தங்களை ஒருவர் ஏமாற்றியதாக, மாவட்ட
எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.பின்னர் நிருபர்களிடம், பாலாஜி கூறியதாவது:
நான், என் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்து, காமெடி 'மீம்ஸ்'கள் அப்லோடு செய்து வருகிறேன். கடந்த, 10 நாட்களுக்கு முன் என்னை, 'சிவகாசி, பாண்டியன் கிராக்கர்ஸ் கம்பெனியிலிருந்து மேனேஜர் பேசுகிறேன்' எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். மேலும், 'நீங்கள், அருமையாக மீம்ஸ் போடுகிறீர்கள். எங்கள் கம்பெனியையும், 'புரமோட்' செய்து கொடுங்கள், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து, பணம் போட்டால் போதும், குறைந்த விலையில் அதிக பட்டாசுகள் உங்கள் வீடு தேடி வரும்' என்றார்.
நானும் அவர்களின் இணையதளம், தொலைபேசி எண்களை பரிசோதனை செய்தேன். அனைத்தும் சரியாக இருந்தது. இதையடுத்து அந்த, 'பாண்டியன் கிராக்கர்ஸ்' கம்பெனிக்கு விளம்பரம் செய்து, தகவல் தொடர்பு எண்களையும் வெளியிட்டு, 'மீம்ஸ்' போட்டேன். மேலும், 30,000 ரூபாய்க்கு நானும், பட்டாசுகள் ஆர்டர் செய்தேன். என், 'இன்ஸ்டா' பக்கத்தில் என்னை பின்தொடரும் பலரும் பட்டாசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைலுக்கு பணத்தை அனுப்பி உள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த மொபைல் எண்கள், இணையதள பக்கங்கள் செயல்படவில்லை. என்னை நம்பி பணம் போட்டவர்கள், எனக்கு போன் செய்கின்றனர். நானும் பணத்தை போட்டு ஏமாந்துள்ளேன். நம் மாவட்டத்தில் மட்டும், பல லட்சம் ரூபாய், இதேபோல மோசடி நடந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.