/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உயர்கல்வி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி மாணவியர் ஒரு நாள் களப்பயணம்
/
உயர்கல்வி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி மாணவியர் ஒரு நாள் களப்பயணம்
உயர்கல்வி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி மாணவியர் ஒரு நாள் களப்பயணம்
உயர்கல்வி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி மாணவியர் ஒரு நாள் களப்பயணம்
ADDED : அக் 10, 2025 12:50 AM
கிருஷ்ணகிரி, உயர்கல்வி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, 12ம் வகுப்பு மாணவியர் ஒரு நாள் களப்பயணம் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில், நான் முதல்வன் திட்டத்தில், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 12ம் வகுப்பு படிக்கும், 7,467 மாணவ, மாணவியரை, உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்த ஏதுவாக, 10 அரசு கல்லுாரி, 11 சுயநிதி கல்லுாரி, அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கடந்த, 8 முதல் வரும், 15 வரை ஒரு நாள் களப்பயணம் அழைத்துச் செல்கின்றனர்.
நேற்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியர், அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்கு களப்பயணம் சென்றனர். சி.இ.ஓ., (பொ) முனிராஜ், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் நளினி ஆகியோர் மாணவியரை வழியனுப்பி வைத்தனர்.
கல்லுாரி களப்பயணத்தில், உயர்கல்வி பயில ஆர்வமூட்டுதல், கல்லுாரி வளாகம், கல்லுாரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், கலையரங்கம், நுாலகங்கள், கணினி அறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சுற்றிப்பார்த்து அறிந்தனர்.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற மாணவியர், மருத்துவ வளாகம், உள்நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம், ஸ்கேன் சென்டர், மருத்துவக்கல்லுாரி வளாகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். இதில், ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.