/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா
/
அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா
அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா
அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா
ADDED : நவ 13, 2025 03:07 AM
கிருஷ்ணகிரி: அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை, ஸ்டெம் திட்டத்தில், அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா நடத்த, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் மூலம், பள்ளி மாணவ, மாணவியர், அறிவியல் அருங்காட்சியகம், கோளரங்கம், உயர்கல்வி நிறுவனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள நடைமுறைகளை அறியவும், அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்க்கவும், படைப்பாற்றல் சிந்தனைகளை துாண்டவும், அறி-வியல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை உருவாக்கவும் கல்விச்-சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 163 அரசு உயர்-நிலை மற்றும், 110 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 9, முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், 702 பேரை, 3 நாள் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
இம்மாணவ, மாணவியர், வழி துணை ஆசிரியர்களுடன், ஆந்-திரா மாநிலம் அகஸ்தியா பவுண்டேசன் மற்றும் கர்நாடகா மாநிலம் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்-நுட்ப அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
மாணவ, மாணவியர் சென்ற, 2 பஸ்களை, சி.இ.ஓ., மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து வழி அனுப்பி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை, உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி ஆகியோர் செய்-திருந்தனர். இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

