ADDED : ஜூன் 18, 2026 04:45 AM

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்-ளியில், 3 முதல், 5ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான சாரண, சாரணியர் இயக்கத்தின் குருளையர் மற்றும் நீலப்பறவையர் அணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் லோகேஷா முன்-னிலை வகித்தார். தேன்கனிக்கோட்டை மாவட்ட பாரத சாரண, சாரணியர் சங்க மாவட்ட செய-லாளர் சம்பத்குமார், உதவி மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், இளம் மாணவர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், குழு ஒருங்கி-ணைப்பு மற்றும் சேவை மனப்பான்மை போன்ற உயர்ந்த பண்புகளை வளர்ப்பதில், சாரண, சார-ணிய இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் வெங்க-டேசுலு செய்திருந்தார்.
