நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், வணிக நோக்கில் செயல்படும் அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை, தொழில் உரிமம் பெற்று தான் இயங்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு, உரிமம் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்கள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த, துணிக்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உட்பட மொத்தம், 4 கடைகள் நேற்று பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.