/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சீல்' வைத்த கிளீனிக் கதவு உடைப்பு
/
'சீல்' வைத்த கிளீனிக் கதவு உடைப்பு
ADDED : நவ 25, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேசிய சுகாதார மைய பிரிவு அலுவலர் டாக்டர் சண்முகவேல் தலைமையிலான அலுவலர்கள், கடந்த, 18ல் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வேப்பனஹள்ளியில், குப்பம் பஸ் நிறுத்தம் அருகில், உரிய மருத்துவம் படிக்காமல் சிகிச்-சைகள் செய்து வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கிளீனிக்-கிற்கு, 'சீல்' வைத்தனர். இந்நிலையில் கடந்த, 21ல் மர்ம நபர்கள் அந்த கிளீனிக்கின், 'சீல்' மற்றும் ஷட்டரை உடைத்துள்-ளனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., யசோதா புகார் படி, வேப்பன-ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.