இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 18வது நாளாக காத்திருப்பு போராட்டம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 18வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 23, 2026 07:38 AM

கிருஷ்ணகிரி: இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 18வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு, 18வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஆசி-ரியர் சந்திரிகா தலைமை வகித்தார். ஆசிரி-யர்கள் தளபதி, மாலிக், நவ்சின் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறியதா-வது: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கைக்காக, இடைநிலை பதிவு மூப்பு ஆசி-ரியர் சங்கம் சார்பில், 10 நாட்கள் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்-றக்கோரி போராட்டம் நடத்தியது. ஆனால் அரசு எங்கள் கோரிக்கையை செவிமடுக்காத கார-ணத்தால், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பிற்கு பின்னர், பள்-ளியை புறக்கணித்து அந்தந்த சி.இ.ஓ., அலுவ-லகம் முன்பு கடந்த, 5 முதல் தொடர்ந்து காத்தி-ருப்பு போராட்டம் நடந்து வருகிறது. எங்கள் ஒற்றை கோரிக்கையான, 'சமவேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கை வெல்லும் வரை போராட்டம் தொடரும் என, மாநில தலைவர் அறிவித்துள்ளார். 16 ஆண்டுகள் போராட்டத்-திற்கு தீர்வு கிடைக்காமல் இம்முறை பின்வாங்க போவதில்லை. 18வது நாளாக எங்கள் போராட்டம் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
