/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்
இயக்கம் சார்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை
நிறைவேற்றக்கோரி நேற்று, 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கணேஷ்
முன்னிலை வகித்தார். பொருளாளர் முனியசாமி கோரிக்கை குறித்து
விளக்கினார். இதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 20,000 இடைநிலை
ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற
வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.

