தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 16, 2026 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய தவறிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்து, ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, தி.மு.க., உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மாநகர மேயர் சத்யா தலைமை வகித்தனர். காங்., மாவட்ட தலைவர் ஹரீஷ்பாபு, இ.கம்யூ., மாநில குழு உறுப்பினர் மாதையன், வி.சி., கட்சி ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை எதிரே, கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டணி கட்சியினர் கண்டன உரையாற்றினர். கெலமங்கலம், தளி, சூளகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மத்துார், பர்கூர், ஊத்தங்கரை ஆகிய, 8 ஒன்றியங்களிலும், தி.மு.க., நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us