/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 07, 2025 01:03 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரி உயிர் தொழில்நுட்பவியல் துறை, பட்டு இனவள மையம், மத்திய பட்டு வாரியம் சார்பில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியருக்கு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்து, பட்டு வளர்ப்பினால் ஏற்படும் ஆதாயங்கள் குறித்து எடுத்துரைத்தார். அறிவியல் அறிஞர் ராஜூமந்தல், மாணவ, மாணவியருக்கு, பட்டு இன பயன்பாடு, ஆராய்ச்சி முறையில் பல்வேறு வகையான நுணுக்கங்கள், பட்டு செடி மற்றும் பட்டு உற்பத்தி முறைகள், உயிர் தொழில்நுட்பவியல் குறித்து விளக்கினார்.
தங்களது சந்தேகங்களை, ராஜூமந்தலிடம் கேட்டு மாணவ, மாணவியர் அறிந்து கொண்டனர். உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் முருகன், அதியமான் கல்லுாரி செயலாளர் சுரேஷ் பாபு, மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.