/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
/
எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 29, 2026 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதுகலை வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்து, கருத்தரங்கை துவக்கி வைத்தார். கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அலைன்ஸ் பல்கலை., பேராசிரியர் அஜம் ேஷக், உணவு மற்றும் சாயத்துறையில் வேதியியலின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதியமான் கல்வி குழும அறங்காவலர் லாசியா தம்பிதுரை, செயலாளர் சுரேஷ், மேலாளர் நாராயணன் மற்றும் 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.துறைத்தலைவர் வாணி நன்றி கூறினார்.

