/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செந்தில் பப்ளிக் பள்ளி முதலாம் ஆண்டு விழா
/
செந்தில் பப்ளிக் பள்ளி முதலாம் ஆண்டு விழா
ADDED : பிப் 28, 2024 02:27 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி,
செந்தில் பப்ளிக் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியில் முதலாம் ஆண்டுவிழா
நடந்தது. இதில், மாண்டிச்சோரி முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.
என்.ஐ., பல்கலைக்கழக
துணைவேந்தர் பெருமாள்சாமி, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி
ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி நிறுவனர்கள் செந்தில், கந்தசாமி,
மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர்
ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ,
மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், கராத்தே மூலம்
பல்வேறு சாகசங்களையும், யோகா பயிற்சியும் செய்து காட்டி மாணவர்கள்
அசத்தினர்.
இதிகாசங்களை நினைவு கூறும் வகையில், மாணவர்கள்,
கிருஷ்ணனின் லீலைகள் மற்றும் அர்ச்சுணன் தபசு நாடகம் நடித்து காட்டினர்.
இதில், நிர்வாக அலுவலர் காத்திகேயன், சி.இ.ஓ., மாதையன், பள்ளி முதன்மை
முதல்வர் சீனிவாசன், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் வேங்கட அழகிரி,
மெட்ரிக் பள்ளி முதல்வர் வேதகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

