ADDED : ஜூன் 21, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42. இவர், மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பல கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன், மத்துார் அண்ணா நகரிலுள்ள, ஜவுளி மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், திருட்டு போனது.அந்த புகாரின் படி, போலீசார் அங்கிருந்த 'சிசி-டிவி' கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்-கொண்டு வந்தனர். இந்நிலையில், கோவிந்த-ராஜை அடையாளம் கண்டு, அவரை பிடித்து விசாரித்ததில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதன் பேரில் மத்துார் போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.
