தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பட்டுப்புழுவியல் துறை மாணவியர் கிருமிநாசினி செயல்முறை விளக்கம்

பட்டுப்புழுவியல் துறை மாணவியர் கிருமிநாசினி செயல்முறை விளக்கம்

பட்டுப்புழுவியல் துறை மாணவியர் கிருமிநாசினி செயல்முறை விளக்கம்


ADDED : மார் 01, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பட்டுப்புழுவியல் துறை மாணவியர், கிருமிநாசனம் மற்றும் கிருமிநாசினி குறித்து ராமசந்திரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலை-யத்தில் படிக்கும் பட்டுப்புழுவியல் துறை மாணவியர், பணி அனுபவம் பெறுவதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், பட்டுப்புழுவியல் துறை மாணவியர் நர்மதா, நிஷாந்தினி, பவித்ரா, சிவரூபினி, சிவ-சந்தியா, ஸ்ரீநிதி, வீனா வில்வம், வினிஷா, விஷ்ணுபிரியா ஆகியோர், ராமசந்திரம் கிராமத்தில்

கிருமிநாசினி மற்றும் கிருமி

நாசனம் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை விவசாயிக-ளுக்கு செய்து

காட்டினர்.

பட்டுப்புழு வளர்ப்பு கூடங்களில் சுத்தம் மற்றும் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவியர் விளக்கினர். மேலும் பல்-வேறு வகையான கிருமிநாசினிகள், அவற்றை சரியான அளவில் கலப்பது, தெளிக்கும் முறை, எப்போது மற்றும் எத்தனை முறை கிருமிநாசனம் செய்ய வேண்டும் போன்ற விளக்கங்களை அளித்-தனர். பட்டுப்புழு வளர்ப்பு அறைகள், உபகரணங்கள் மற்றும் சுற்-றுப்புறங்களை சுத்தம் செய்வது குறித்து நேரடி செய்முறை விளக்-கமும் அளித்தனர். இதில் விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us