/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் பகலில் கடும் குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
ஓசூரில் பகலில் கடும் குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஓசூரில் பகலில் கடும் குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஓசூரில் பகலில் கடும் குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 30, 2025 02:52 AM
ஓசூர்: ஓசூர் பகுதியில், நேற்று பகல் நேரம் முழுவதும் கடும் குளிர் நில-வியதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் கடும் குளிர் நிலவும். நடப்பாண்டு கனமழை பெய்துள்ளதால், குளிரின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கன
மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஓசூர் பகுதியில் காலை முதலே வெயில் முகம் காட்டவில்லை. நேற்று அதிகாலை, 4:47 மணிக்கு குறைந்-தபட்சமாக, 16.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
அதேபோல், பகல் நேரத் தில் சராசரியாக, 18.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. காற்றில் அதிகபட்சமாக, 85.8 சதவீதம் அள-விற்கு ஈரப்பதம் இருந்தது. 5 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. அதனால், காலை முதல் மாலை வரை குளிரின் தாக்கத்தை அதிக-மாக உணர முடிந்தது.
வயதானவர்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இருசக்கர வாகனங்களில் சென்றோர், குளிரின் தாக்-கத்தை அதிகமாக உணர்ந்தனர்.
ஸ்வெட்டர் அணியாமல் வெளியே செல்வது சவாலான விஷய-மாக இருந்தது. ஓசூர் பகுதியில் நேற்று மாலை வரை மழை பெய்யாத போதும், குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மக்-களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

