/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்; பொதுமக்கள் சாலை மறியல்
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்; பொதுமக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்; பொதுமக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்; பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : செப் 09, 2024 07:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி, 13வது வார்டு ரயில்வே காலனியில், நகராட்சி துணைத்தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த சாவித்திரி கடலரசு மூர்த்தி கவுன்சிலராக உள்ளார். இங்கு, 700 வீடுகள் உள்ளன. இங்குள்ள சாக்கடை கால்வாய்கள் சீராக இல்லாததால், பல ஆண்டுகளாக கழிவுநீர் முறையாக வெளியேறுவதில்லை. மழைக்காலங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை நகர்மன்ற துணைத் தலைவர், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று மாலை பலத்த மழையின்போது, ரயில்வே காலனியிலுள்ள பல வீடுகளில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காந்திசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'நகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியிலுள்ள சாக்கடை கால்வாய் பிரச்னையை தீர்க்காமல் உள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் முறையாக கழிவுநீர் வெளியேறும் வகையில், கால்வாயை சீரமைக்க வேண்டும்' என்றனர்.அவர்களிடம், டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, 'நகராட்சியில் முறையிட்டு உடனே சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என சமாதானப்படுத்தினார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.