ADDED : ஜன 14, 2026 07:33 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், கழி-வுநீர் சீரமைப்பு பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்-நிலையில் பணிகள் மெத்தனமாக நடப்பதாகவும், கால்வாயில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், நான்கு ரோடு சந்திப்பு விநாயகர் கோயில் அருகில், பொங்கல் பண்டிகையின்போது, பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருவதும், அதேபகுதியில்
எருதுவிடும் விழா விளையாட்டும் நடக்க உள்ளது. இந்நி-லையில், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு, டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமா-ரிடம் மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
அதன்படி, நேற்று திறந்தநிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றி, புனரமைப்பு பணிகளை தீவிரப்-படுத்தினர். டவுன் பஞ்., அலுவலர்கள், தி.மு.க., மாவட்ட ஓட்-டுனர் அணி தலைவர் செந்தில்குமார் தலைமையில் கழிவுநீர் சீர-மைப்பு பணிகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
