/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலியல் வன்கொடுமை; மாணவன் மீது போக்சோ
/
பாலியல் வன்கொடுமை; மாணவன் மீது போக்சோ
ADDED : டிச 31, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த மாணவன், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ முதலாமாண்டு படிக்கிறார். இவர், அஞ்செட்டி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார்.
சிறுமியை திருமணம் செய்வதாக நம்ப வைத்து, கடந்த, 26 காலை, 11:00 மணிக்கு, தன் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் சிறுமி புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர்.