/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூன் 03, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூர், மத்திகிரி மற்றும் சிப்காட் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதி கடைகளில், போலீசார் மற்றும் ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துமாரியப்பன் அடங்கிய குழுவினர் இணைந்து, தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, இரு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.இதில், புகையிலை பொருட்களை விற்ற, 10 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஓசூர் சிப்காட் மற்றும் மத்திகிரி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த மே மாதத்தில், 24 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.