ADDED : ஜன 29, 2025 07:11 AM
ஓசூர்: ஓசூர், ஆந்திர சமிதியில், பிரம்மதேவர் சரஸ்வதி மலை நல அறக்கட்டளை சார்பில், மாதந்தோறும், 28ம் தேதி, கலிக்கம் என்ற பாரம்பரிய சித்த மருத்துவ முகாம் நடக்கிறது. இம்மாத முகாம் நேற்று நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். முகாமில், தலைவலி, கண் புரை, கிட்ட பார்வை, துாரப்பார்வை, விஷக்கடி, தேமல், வெண்பட்டை, கரும்பட்டை மற்றும் அனைத்து விதமான தோல் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, கண்ணில் மூலிகை மருந்து ஊற்றப்பட்டது.
முன்னதாக, சொட்டு மருந்து ஊற்ற வந்தவர்கள் மிளகு சாப்பிட்ட பின், இளநீரில் சித்தர்கள் கண்டறிந்த மூலிகை மருந்தை கலந்து, பொதுமக்களுக்கு இரு கண்களிலும் ஊற்றப்பட்டது. மேலும், முகாமிற்கு சொட்டு மருந்து ஊற்றி கொள்ள வருகை தருபவர்கள், அசைவம் சாப்பிட்டு விட்டு வரக்கூடாது என கூறப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் தேவராஜன், பொருளாளர் சக்திவேல், இணை செயலாளர் சின்னப்பா, கவுன்சிலர் ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

