/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிலம்பக்கலை விழிப்புணர்வு பேரணி
/
சிலம்பக்கலை விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 06, 2025 03:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் மாவட்ட சிலம்பாலயா சிலம்ப கலைக்கூடம் ஆகியவை சார்பில், சிலம்ப கலை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சிலம்பா-லயா சிலம்ப கலைக்கூட அமைப்பாளர் கவுரிசங்கர், வர்மக்கலை ஆசான் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சிலம்பாட்ட கழக செயலர் பவுன்ராஜ் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழர்-களால் தோற்றுவிக்கப்பட்ட சிலம்பக்கலை தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழக அரசு கல்லுாரி சேர்க்கை மற்றும் அரசு பணியில் சேர விளையாட்டு பிரிவில் சிலம்பத்தை இணைத்துள்ளது. சிலம்பத்தை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எனவே மாணவ, மாணவியர் அனைவரும் சிலம்பத்தை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றார்.விழிப்புணர்வு பேரணி, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பா-லத்தில் துவங்கி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி வரை நடந்தது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில், மாணவ, மாணவியர் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, பட்டாக்கத்தி வீச்சு, நட்சத்திர பூப்பந்தம் சுழற்சி, வாள் கேடயம் சுழற்சி ஆகியவற்றை தனித்தனியாக செய்து காட்டினர். முடிவில், சங்கங்களுக்கு இடையிலான சிலம்ப போட்டிகள் நடத்-தப்பட்டு, கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.