ADDED : செப் 04, 2026 03:31 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 23 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியராக பிரான்சிஸ், 48, உள்ளார். இவர், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர் இருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, 1098 என்ற குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் விசாரித்த தேன்கனிக்கோட்டை போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து பிரான்சிசை, நேற்று கைது செய்தனர்.
